கவனயீனமாக செயற்பட்டால் இந்தியாவின் நிலையே இங்கும்

எச்சரிக்கிறார் டாக்டர் ஹேமந்த ஹேரத்

 

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை நாம் அண்மிக்கவில்லை. ஆனால், இலங்கையில் தற்போது காணப்படும் நிலைமை கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டால் அந்த நிலைக்குச் செல்வதை தவிர்க்க முடியாதென விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரி வித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை நாம் அண்மிக்கவில்லையென்பதை என்னால் பயமின்றி கூற முடியும். ஆனால் இலங்கையில் தற்போது காணப்படும் நிலைமை கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டால் அந்த நிலைக்குச் செல்வதை தவிர்க்க முடியாது.தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் உயிரிழப்புக்கள் ஏற்படும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு காரணத்துக்காகவும் கட்டாயம் சிகிச்சையளிக்கப்பட வேண்டிய நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்காமலிருப்பதற்கு எந்தவொரு மருத்துவ நிறுவனத்துக்கும் உரிமை கிடையாது.

 

Mon, 05/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை