பயணத்தடையை 28 ஆம் திகதிக்கு பின்னரும் அமுலாக்க தீர்மானம்?

நாளை 25 ஆம் திகதி ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின் இறுதி முடிவு

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பயணத்தடை எதிர்வரும் 28ஆம் திகதி அதிகாலை நிறைவடையவுள்ளதுடன் அதற்குப் பின்னரும் நாடளாவிய ரீதியில் பயணத் தடை விதிப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கப்படுமென கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

28ஆம் திகதிக்கு பின்னர் அடுத்த வார இறுதியில் மீண்டும் பயணத்தடையை நடைமுறைப்படுத்துவது  தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதற்கான தீர்மானத்தை 25ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதியுடன் நடத்தும் பேச்சுவார்த்தையையடுத்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி நேற்றையதினம் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராணுவத்தளபதி,..

சுகாதாரத்துறையினர் ஊடகங்களுக்கு வழங்கும் சில கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 04 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. அதனையடுத்து 19 மணித்தியாலங்களுக்கு பின்னர் அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் பயணத் தடை எதிர்வரும் 28ஆம் திகதி அதிகாலை 04 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

நேற்று முன்தினம் 04 மருத்துவர் சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடையை நீக்காது தொடர்ந்து 14 தினங்களுக்கு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளன. அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்;

மருத்துவர் சங்கங்கள் கூற வேண்டியவற்றை எமது கொரோன வைரஸ் தடுப்புக்கான குழுவிடம் தெரிவிப்பார்கள். ஆனால் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அதேவேளை 28ஆம் திகதி அதிகாலை வரைக்கும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை தீர்மானித்தபடி நடைமுறையிலிருக்கும்.

எனினும் எதிர்வரும் 25 26 அல்லது 27 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தை நடத்தி அவசியமானால் அப்போதுள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு மேலும் தொடர்ந்தும் பயணத்தடையை நீடிப்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன் போது அதற்கு எவரும் மறுப்புத் தெரிவிக்கவும் இல்லை.

அதேபோன்று மீண்டும் ஜனாதிபதி அவர்கள் நேற்று முன்தினம், 25, 26 அல்லது 27 ஆம் திகதிகளில் அதற்கடுத்த வார இறுதியில் தற்போது நடைமுறையில் உள்ளது போன்று நாடளாவிய ரீதியில் பயணத் தடையை நடைமுறைப்படுத்துவது அல்லது மேலும் சில தினங்கள் தற்போதுள்ள பயணத்தடையைத் தொடர்வதா என்பது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டு தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார் என இராணுவத் தளபதி நேற்று தெரிவித்துள்ளார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 05/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை