தேசிய இளைஞர் தினம்; இன, மத வேறுபாடின்றி அனைத்து சவால்களையும் ​வெற்றிகொள்வோம்

- இளைஞர்களுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அழைப்பு 

அனைத்து சவால்களையும் ஒன்றிணைந்து வெற்றி கொள்ள இன, மத வேறுபாடுகள் இல்லாமல் என்னுடன் ஆற்றலுடன் முன்னோக்கி வரும் இலங்கை இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் இதனை தனது தேசிய இளைஞர் தின செய்தியில் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள தேசிய இளைஞர் தின செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

இலங்கை இளைஞர்களின் விலைமதிப்பற்ற சேவையைப் பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 23ஆம் திகதி கொண்டாடப்படும் தேசிய இளைஞர் தினத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

1983 மே 23 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் உத்தியோகபூர்வ ஸ்தாபிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் 1999 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்த நாட்டின் வரலாறு இலங்கை இளைஞர்களின் பலத்தால் வண்ணமயமானது என்பது இரகசியமல்ல. வெற்றியிலும் தோல்வியிலும் வாழ்க்கையை அனுபவித்து இலங்கை இளைஞர்கள் தாய்நாட்டின் தேவைகளுக்காக அர்ப்பணித்துள்ளனர். 

அவர்களின் வலிமை அவர்களின் அர்ப்பணிப்பு, ஒற்றுமை மற்றும் தைரியம் காரணமாக நம் நாடு நாளுக்கு நாள் வலுவடைந்து, புதிய உலகை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. 

இளைய தலைமுறையினரின் மதிப்பு உணரப்படாத சில காலங்களில் இளம் வாழ்க்கையை இழந்து இருளில் மூழ்கியமையை நீங்களும் நானும் நன்கு அறிவோம். 

வாழ்க்கையின் விலைமதிப்பற்ற காலத்தை சிந்தித்து செயற்படுத்துவதன் மூலம் தங்களதும் நாட்டினதும் எதிர்காலத்தை பிரகாசிக்க செய்வதற்கு வாய்ப்பு கிட்டுவதுடன், முன்மாதிரியான இளைஞர்களாக முன்வந்து நீங்கள் அனைவரும் நாட்டை பொறுப்பேற்க வேண்டும் என்பது எனது நம்பிக்கையாகும். 

நாடு முழுவதும் பரந்து வாழும் இளைஞர்களின் புதிய யோசனைகளைக் செவிமடுத்து அவர்களின் பார்வையை நாட்டின் நோக்குடன் யதார்த்தமாக்குவதற்கு தலையீடு செய்து செயற்படுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளமை எனது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பாக்கியமாகும். 

கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்வந்த இளைஞர்கள், இளைஞர்களின் வலிமைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். 

தெற்காசியாவின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாக இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலையீட்டின் கீழ் 10 நாட்களில் 10,000 கட்டில்கள் சவாலை ஒரு யதார்த்தமாக்கியது மாத்திரமல்லாது, தற்போது நிலவும் இரத்த பற்றாக்குறைக்கு ஒரு தீர்வை வழங்கி இரத்த தானம் செய்வதற்கு ஒரு தேசிய தொண்டு தொடங்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது. 

தற்போது, கொவிட்-19 தொற்றுநோய் இளைய தலைமுறையினருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இத்தகைய இக்கட்டான சூழலில் தம் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான சவாலை சமாளிக்கும் அதேவேளை மறுபுறம் கொவிட் 19 ஐ தோற்கடிக்கும் சவாலை சமாளிக்க நம் நாட்டின் இளைய சமுதாயத்தினர் ஒன்றிணைய வேண்டும்.

  

 

 

 

     

Mon, 05/24/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை