பிறந்த நாளைக்கு அழைப்பில்லை: ஆறு பேரை சுட்டுக்கொன்ற ஆடவர்

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு தம்மை அழைக்கவில்லை என்பதால் ஏமாற்றம் அடைந்த ஆடவர் ஒருவர் அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஆறு பேரை சுட்டுக் கொன்றுள்ளார்.

டியடோரோ மாசியஸ் என்ற 28 வயது ஆடவர் 28 வயதான தனது காதலி மற்றும் ஐந்து உறவினர்களை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் தற்போதே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வட மத்திய கொலொராடோ நகரான புல்டரில் உள்ள கடை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Thu, 05/13/2021 - 17:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை