பாகிஸ்தானில் அமெரிக்கா ‘தளம்’ அமைக்க எதிர்ப்பு

சவூதி முடிக்குரிய இளவரசரின் கோரிக்கைக்கு அமைதி அமெரிக்காவுக்கு இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்கு பாகிஸ்தான் இடம் கொடுத்தால் அதற்கு எதிராக கடுமையாக போராடுவதாக ஜமாத்தே இஸ்லாமி மாகாண செனட்டர் முஷ்டாக் அஹமது கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா நெருக்கமான உறவை கொண்டாடுகின்றபோதும், அதனால் எமது நாட்டில் அமெரிக்காவுக்காக இராணுவ தளத்தை அமைக்கக் கோரும் கடிதத்தை நிறைவேற்ற அனுமதிக்க முடியாது’ என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புகளை வாபஸ் பெறும் அமெரிக்கா அயல் நாட்டில் நிலைமையை கண்காணிப்பதற்காக பாகிஸ்தானில் தளத்தை அமைக்க தற்போது விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Thu, 05/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை