ரஷ்ய பாடசாலையில் துப்பாக்கி சூடய் சிறுவர்கள் பலர் உயிரிழப்பு

ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றி மாறுபட்ட செய்திகள் வெளியான நிலையில் குறைந்தது ஏழு சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உத்தியோகபூர் அறிக்கை தெரிவித்துள்ளர். காயமடைந்த பலரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் நான்கு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் இருப்பதாக கசானை தலைநகராகக் கொண்ட டடர்ஸ்தான் குடியரசின் ஆளுநகர் ரஸ்தான் மினிகோவா தெரிவித்துள்ளார்.

நான்கு மாடிகள் கொண்ட அந்த பாடசாலையில் இருந்து சரமாரியாக துப்பக்காச் சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தபோது மூன்றாவது மாடியில் இருந்து இரண்டு சிறுவர்கள் கிழே குதிப்பது வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது.

இரு துப்பாக்கிதாரிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக இன்டர்பெக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்த அதேநேரம் ஒரு துப்பாக்கிதாரி மாத்திரமே இருந்ததாக வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாடசாலை கட்டடத்திற்கு வெளியில் இளைஞர் ஒருவரை பொலிஸ்தார் தரையில் படுக்க வைத்திருக்கும் படங்களை சமூக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

‘19 வயதான பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். துப்பாக்கி அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவருடன் தொடர்புபட்ட ஏனைய கூட்டாளிகள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று அந்த பாடசாலைக்கு வந்த மினிகோவா தெரிவித்தார்.

மேலும் துப்பாக்கிதாரிகள் தலைமறைவாக இருக்கிறாரர்களா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தை மீளாய்வு செய்யும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.

மொஸ்கோவின் கிழக்காக சுமார் 800 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் கசான் நகரில் இருக்கும் அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் பாடசாலைகளில் இவ்வாறான துப்பாக்கிச் சூடுகள் இடம்பெறுவது அரிதான ஒன்றாகும்.

எனினும் 2018 ஆம் ஆண்டு கிரிமியா பிராந்தியத்தில் கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொல்லப்பட்ட நிலையில் அந்த மாணவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Wed, 05/12/2021 - 14:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை