தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் முப்பது பேருக்கு கொரோனா

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட சென்கூம்ஸ் கிராம அலுவலகர் பிரிவில் நேற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்குள் உட்பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தடை மீள்அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அங்கு வேலை செய்யும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அங்கு வேலை செய்யும் 40 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கமைய அதில் 30 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தொற்றுக்குள்ளான அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். இதனையடுத்து இப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனாத் அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை குறூப் நிருபர், ஹற்றன் சுழற்சி நிருபர்
 

Sat, 05/08/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை