ரயில்வே வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது

ரயில்வே தொழிற்சங்கங்கள் சில முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

அதற்கிணங்க அரசாங்கம் ரயில்வே ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ரயில்வே என்ஜின் சாரதிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இந்திக்க தொடங்கொட இது தொடர்பில் நேற்று தெரிவிக்கையில்:

ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரியின் நடவடிக்கைக் கிணங்க ரயில்வே ஊழியர்களுக்கு நேற்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் அதனால் ரயில் சேவைகளில் சற்று தாமதம் ஏற்பட்டதாகவும் தொழிற்சங்க போராட்டங்கள் எதுவும் நடைபெற மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ரயில் சேவைகள் நடைபெறாது என அறிவித்திருந்த போதும் பெலியத்த, கண்டி, சிலாபம், அம்பேபுஸ்ஸ, அவிசாவளை போன்ற பகுதிளுக்கான ரயில் சேவைகள் நேற்று இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Tue, 05/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை