சுகாதார துறையினருக்கு பங்களிக்கும் முப்படையினர்

இராணுவ, விமான, கடற்படை என முப்படைகளும் இந்நாட்டு சரித்திரத்தில் நாட்டு மக்களுக்காக ஆற்றிய பணிகளை எழுத, கூற வார்த்தைகள் கிடையாது. தங்களது கடமைகளுக்கு அப்பால் சென்று முப்படையினர் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவையாகும். தற்போது ஏற்பட்டுள்ள தொற்று நிலைமையில் நாட்டு மக்களை விடுவிக்க தங்களது பங்களிப்பை சுகாதாரப் பிரிவினருக்கு வழங்குகிறார்கள். ஆனால் தற்போது எதிர்பாராத வகையில் கொரோனா தொற்று இந்நாட்டில் மீண்டும் பாரியளவில் அதிகரித்துள்ளது. நோயாளிகள் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் நிலைமை தோன்றியுள்ளது. அவர்களுக்கு அத்தியாவசியமான சேவையாக மாறியுள்ள வைத்தியசாலை வசதிகளை முப்படையினரும் ஏற்படுத்திக் கொடுக்க முன் வந்துள்ளார்கள்.

ஆயிரக்கணக்கான கட்டில்களைத் தயாரித்து குறுகிய காலத்தில் தற்காலிக வைத்தியசாலைகளை இரவு, பகல் பாராது அமைத்து வருவதை நாம் காணலாம். அதனடிப்படையில் இராணுவத்தினரால் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தேவைக்காக சீதுவைப் பகுதியில் அமைந்துள்ள ‘பிரண்டிக்ஸ் கிறீன் ப்ளெனெட்’ நிறுவனத்தின் கட்டடத்தில் இராணுவ மகளிர் பிரிவின் பங்களிப்புடன் அனைத்து சுகாதார வசதிகளையும் கொண்ட இலங்கையின் நவீன வசதிகளுடன் கூடிய அதிக இடப்பரப்பைக் கொண்ட வைத்தியசாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

நவீன வசதிகளைக் கொண்ட இவ்வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார். இவ்வைத்தியசாலை 24 மணித்தியாலத்துக்குள் அமைக்கப்பட்டது விசேட அம்சமாகும். 2000 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் இவ்வைத்தியசாலை நோயாளிகளுக்கு பல அணிகளாக சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tue, 05/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை