புதிய துறைமுக நகர்த்திட்டம் ஊடாக 05 ஆண்டுகளில் 15 பில். அமெ.டொலர்

நாட்டில் முதலீடு; 75 வீதம் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு

சட்டமூலத்துக்கு ஆதரவளிக்குமாறு நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் பாராளுமன்ற உரையில் பிரதமர்  மஹிந்த ராஜபக்‌ஷ அறைகூவல்

 

புதிய துறைமுக நகரத்திட்டத்தினூடாக, அடுத்த 05 ஆண்டுகளில் குறைந்தது 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை நம் நாட்டிற்கு ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு தேவையான சட்ட மற்றும் வணிக வசதி கட்டமைப்பை இன்று நாம் இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக நிறுவுவோம்.

இதன் மூலம், கொவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் கூட, நம் நாட்டில் ஒரு திருப்புமுனையை நாம் ஏற்படுத்த முடியும். உலகின் சிறந்த முதலீட்டாளர்களை நம் நாட்டிற்குள் ஈர்ப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எமது நாட்டை நேசிக்கும், நாட்டின் எதிர்கால பயணத்தை ஆசீர்வதிக்கும் அனைத்து உறுப்பினர்களையும் கட்சி பேதமின்றி இச்சட்டமூலத்திற்கு ஆதரவை பெற்றுத் தருமாறு அழைப்பு விடுக்கின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை நிறுவும் சட்டமூலத்தை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெவித்தார்.

பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எங்கள் அரசாங்கம் எப்போதும் மக்களுக்குச் செவிசாய்க்கும் அரசாங்கம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்களின் கருத்துக்களை நாங்கள் பாராட்டுகிறோம். நான் உச்ச நீதிமன்றத்தை மதிக்கிறேன். எனவே, இந்தச் சட்டமூலம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அனைத்து வழிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் இரண்டாவது வாசிப்பில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். இதேவேளை, மக்களதும் நமது சகோதர கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டு, இந்தச் சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களை மேற்கொள்ளவும் எதிர்பார்க்கின்றோம்.

அவற்றில் ஒன்று இந்த ஆணையத்தின் கட்டமைப்பு பற்றியது. ஆணைய கட்டமைப்பில் பெரும்பான்மையான இலங்கையர்கள் இருக்க வேண்டும் என்பதை சட்டத்திலேயே உறுதிப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிஷாந்தன்

Thu, 05/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை