துறைமுக நகர் இலங்கையர் டொலரில் சம்பாதிக்க உதவும்

தொழில் வாய்ப்புகளுக்கும் உத்தரவாதம்-

துறைமுக நகரம் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பல தொழில் வாய்ப்புகள் மக்களுக்கு கிடைக்குமென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். எதிர்வரும் 5 வருடங்களில் 15 பில்லியன் டொலர் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் 2,00,000 வேலைவாய்ப்புக்கள் கிடைக்குமென்றும் அவர் கூறினார்.

அடுத்த 05 வருடங்களில் 83 ஆயிரம் அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை காரணமாக இலங்கையிலுள்ள மக்கள் துறைமுக நகரத்தில் பணிபுரிந்து டொலரில் சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கிட்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல துறைமுக ஆணைக்குழுவினால் நிதி மோசடி இடம்பெறாதென்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டார். ஆகவே நாளைய தினம் (இன்று) பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

Thu, 05/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை