வோட்டர்கேட் சூத்திரதாரி கோர்டன் லிட்டி மரணம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகக் காரணமான வோட்டர்கேட் விவகாரத்தில் மூளையாக செயற்பட்ட ஜி கோர்டன் லிட்டி தனது 90 ஆவது வயதில் காலமானார்.

விர்ஜினியாவில் இருக்கும் தனது மகளின் வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை மரணித்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

1972 ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நிக்சனின் மறு தேர்தல் பிரசாரக் குழுவில் இருந்த லிட்டி, வோட்டர்கேட் கட்டடத்தில் ஜனநாயகக் கட்சி தலைமையத்திற்குள் ஊடுருவி, அங்கு ரகசிய கருவிகளை பொருத்தியதாக பிடிபட்டார்.

இது தொடர்பிலான வழக்கில் 1973 ஆம் ஆண்டு சதி வேலையில் ஈடுபட்டது, கொள்ளை மற்றும் சட்டவிரோதமாக ஓட்டுக்கேட்டதாக குற்றங்காணப்பட்டு லிட்டிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நிக்சன் 1974 ஆம் ஆண்டு பதவி விலகினார்.

இந்நிலையில் நான்கரை ஆண்டுகள் சிறை அனுபவித்த லிட்டி பிற்காலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததோடு வானொலி நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினார்.

Thu, 04/01/2021 - 07:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை