மனிதநேயமிக்க பொலிஸ் அதிகாரி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் யாழ். நகர் மத்திய பகுதியில் உணவின்றி தவித்த சித்த சுவாதீனம் அற்ற ஒருவருக்கு யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் உணவளித்த காட்சி பலரது மனதை தொட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் இந்தக் காட்சி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. அண்மையில் நடு வீதியில் வைத்து சாரதி ஒருவரை மிதித்து தாக்கிய பொலிஸ் அதிகாரி மத்தியில் இத்தகைய நல்ல பொலிஸ் அதிகாரிகளின் செயலையும் நாங்கள் பாராட்ட வேண்டும்.
இவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர் நயினை சுதர்சனின் கேமராவுக்குள் சிக்கியது இந்தக் காட்சி.
from tkn
Post a Comment