ஆப்கானின் அமைதி மாநாடு ஒத்திவைப்பு

ஸ்தன்பூலில் நடைபெறவுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆப்கான் அமைதி மாநாடு புனித ரமழான் மாதம் முடிவு வரை ஒத்திவைக்கப்படுவாக துருக்கி அறிவித்துள்ளது.

“இந்த மாநாட்டை ஒத்தி வைப்பதால் நன்மை பயக்கும் என்று நாம் நினைத்தோம். கட்டார், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனையை பெற்ற நாம் ரமழான் மற்றும் பெருநாளைக்கு பின்னர் இந்த மாநாட்டை நடத்த தீர்மானித்தோம்” என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் மவ்லுத் கவுசொக்லு தெரிவித்தார்.

ஆப்கானில் இருந்து அமெரிக்கா, துருப்புகளை வாபஸ் பெறும் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டபோதும் இந்த மாநாட்டை நடத்துவதற்கு அவசரப்படத் தேவையில்லை என்று கவுசொக்லு மேலும் கூறினார்.

ரமழாம் மற்றும் அதனைத் தொடர்ந்து பெருநாள் கொண்டாட்டம் வரும் மே நடுப்பகுதியில் முடிவடையவுள்ளது.

ஆப்கானில் வன்முறைகள் அதிகரித்திருக்கும் நிலையில் அந்நாட்டின் எதிர்காலம் தொடர்பில் தீர்க்கமாக பார்க்கப்படும் இந்த மாநாடு ஏப்ரல் 24 தொடக்கம் மே 4 வரை நடத்த ஏற்பாடாகி இருந்தது.

எனினும் ஆப்கானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறும் வரை இதில் பங்கேற்பதை தலிபான்கள் முன்னதாக நிராகரித்திருந்தனர்.

Thu, 04/22/2021 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை