உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தி

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு 02 வருடங்கள் பூர்த்தியடைவதையிட்டு இன்று புதன்கிழமை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட தேவாராதனைகள் நடைபெறவுள்ளன. இவற்றுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இதுதொடர்பாக அனைத்து பிரதி பொலிஸ் மாஅதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் தொகுதி, பொலிஸ் பிரிவின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 04/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை