மட்டக்களப்புக்கு மே மாதம் விஜயம் செய்கிறார் ஜனாதிபதி

கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்துக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்வரும் மே மாதம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று கேட்டறிந்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவுள்ளார். ஜனாதிபதியின் இவ்விஜயத்தின்போது அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சு செயலாளர்கள் மற்றும் அரச உயரதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதியின் விஜயத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பாக விசேட கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் ஜனாதிபதி இணைப்பாளர் இசுறு ஹேரத்தின் பங்குபற்றுதலுடன் நேற்று (20) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு விசேட நிருபர்

Wed, 04/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை