மலையகத்தில் பலத்த பாதுகாப்புடன் கிறிஸ்தவ ஆலயங்களில் பெரிய வெள்ளி வழிபாடுகள்

- கொவிட் 19 சுகாதார விதிமுறைகளும் பின்பற்றல்

பெரிய வெள்ளி தினமான நேற்று நாடளாவிய ரீதியில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மரணத்தின் அர்த்தத்தை மாற்றி எழுதியது இயேசுவின் மரணம் என்பது உலகறிந்த உண்மை.

புனித வெள்ளியை பெரிய வெள்ளி என்றும் ஆண்டவருடையை திருப்பாடுகளில் வெள்ளி (Good Friday) என்றும் சொல்கின்றனர்.

இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளையே புனித வெள்ளியாக உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர்.

எனினும் கடந்த ஆண்டு கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பெரிய வெள்ளி வழிபாடுகள் இடம்பெறவில்லை. அந்த வகையில் மலையக கிறிஸ்தவ ஆலயங்களிலும் பொலிஸ் பாதுகாப்புபோடு வழிபாடுகள் இடம்பெற்றன.

பெரிய வெள்ளி அனுஷ்டிப்பின் ஆரம்ப நிகழ்வாக இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூறும் முகமாக ஆலய வளாகங்களில் சிலுவை பாதை இடம்பெற்றது, அதனைத் தொடர்ந்து மாலை திருச்சிலுவை ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றன.

மலையகத்தில் பிரதான நகரங்களில் ஒன்றான ஹற்றன் நகர திருச்சிலுவை ஆலயத்தில் அருட்தந்தை நியூமன் பெரேரா தலைமையில் வழிபாடுகள் ஆரம்பமாகின. பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆலய நிர்வாக குழுவினரின் பரிசோதனையின் பின்னர் பக்தர்கள் ஆலயத்தினுள் உள்வாங்கப்பட்டதுடன் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை பேணி பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டித்தமை குறிப்பிடத்தக்கது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Sat, 04/03/2021 - 09:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை