முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸின் பதவி நீக்கம் சட்டவிரோதமானது

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், பதவியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் அனுமதியுடன் மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டார். இவ்வாறு சட்டரீதியாக  நியமிக்கப்பட்டவரை, ஜனாதிபதியின் விருப்பப்படி அவருடைய செயலாளரின் கடிதத்தின் ஊடாக நீக்க முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் , மொஹான் பீரிஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், நிசாந்தன் சுப்ரமணியம்

Tue, 04/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை