தடுப்பூசியை விடவும்: கொரோனா தொற்றால் இரத்தக்கட்டு அபாயம்

மூளையில் இரத்தக்கட்டு ஏற்படும் அபாயம் தடுப்பூசி போட்டுக்கொண்டோரை விட கொவிட்–19 நோய்க்கு ஆளானோருக்கு மிக அதிகம் என்று பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சிலவகைத் தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொண்டோருக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாகத் தகவல் வந்துள்ள நிலையில் தடுப்பூசிகள் குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன.

அஸ்ட்ராசெனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோரில் சிலரிடையே அரிய வகை இரத்தக் கட்டிகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், கொவிட்–19 நோய் அடையாளம் காணப்பட்ட 1 மில்லியன் பேரில்

39 பேருக்கு அத்தகைய இரத்தக் கட்டி ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி போட்டுக் கொண்ட 1 மில்லியன் பேரில் ஐவர் பாதிக்கப்பட்டனர்.

பைசர் தடுப்பூசி பெற்ற ஒரு மில்லியன் பேரில் நால்வருக்கு இரத்தக்கட்டி ஏற்பட்டது.

Sat, 04/17/2021 - 18:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை