மீள நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறப்பு

மீள நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறப்பு-Reconstructed Mullivaikkal Monument Unveiled Today

- அடிக்கல் நட்ட துணைவேந்தரால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றையதினம் (23) திறந்து வைக்கப்பட்டது.

மீள நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறப்பு-Reconstructed Mullivaikkal Monument Unveiled Today

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி மாதம் 08ம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கில் நாளை ஹர்த்தாலுக்கு அழைப்பு-Jaffna University Mullivaikkal Monument Destruction

இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

மீள நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறப்பு-Reconstructed Mullivaikkal Monument Unveiled Today

மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம், கடந்த ஜனவரி 11ஆம் திகதி காலை அதற்கான அடிக்கல் துணைவேந்தரால் நடப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அதே இடத்தில் மீண்டும்-Jaffna University Mullivaikkal Monument-Foundation Stone Laid Again

இந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அதேவேளை இன்றைய தினம் தூபி திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் நேற்று முன்தினம் (21) புதன்கிழமை இரவு  மாரடைப்பு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துணைவேந்தர், தொடர்ந்து வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீள நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறப்பு-Reconstructed Mullivaikkal Monument Unveiled Todayமீள நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறப்பு-Reconstructed Mullivaikkal Monument Unveiled Today

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

Fri, 04/23/2021 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை