ஆசிரிய ஆலோசகர் விபத்தில் மரணம்

சம்மாந்துறை வலய ஆங்கில மொழி பாட ஆசிரிய ஆலோசகர் அப்துல் ஜப்பார் விபத்தில் மரணமானார். இச் சம்பவம் நேற்று (22) வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

நேற்று காலை கடமை நிமித்தம் சம்மாந்துறையிலிருந்து மல்வத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது பங்களாவடிக்கு அப்பால் திடீரென வீழ்ந்திருக்கிறார்.

தனியே சென்ற அவர் அந்த இடத்தில் மரணமடைந்ததாக  தெரிகிறது. அவரது பிரேதம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காரைதீவு குறூப் நிருபர்

Fri, 04/23/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை