தென்னாபிரிக்காவில் பரவும் கொரோனா; மூவருக்கு அடையாளம்

- நாட்டில் மூவருக்கு இனங்காணப்பட்டுள்ளது 

நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கிணங்க தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வகை வைரஸ் தொற்று கொழும்பில் மூன்று நபர்களுக்கு காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர விஞ்ஞான பீட பணிப்பாளர் டாக்டர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

மேற்படி வைரஸ் தொற்றாளர்கள் இருவரும் கட்டார் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்றும் அவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையையடுத்து அவர்களுக்கு தென்னாபிரிக்காவில் பரவும் வைரஸ் தொற்று இனங் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிரிட்டனில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள B.1,428 வகை கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் 7 பேர் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் ஒருவர் மீனவர் ஆவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  மேற்படி தொற்றுக்குள்ளான நோயாளர்கள் மூவர் கொழும்பு பகுதியில் இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

Fri, 04/09/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை