அஜித் மான்னப்பெரும எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்தார்

அஜித் மான்னப்பெரும எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்தார்-SJB MP Ajith Mannapperuma Sworn in As MP In Place of Ranjan Ramanayake

ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் வெற்றிடமானதன் மூலம் உருவான எம்.பி. பதவிக்கு அஜித் மான்னப்பெருமா சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இன்றையதினம் (09) அவை நடவடிக்கைகள் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானதைத் தொடர்ந்து இப்பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஜித் மான்னப்பெரும எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்தார்-SJB MP Ajith Mannapperuma Sworn in As MP In Place of Ranjan Ramanayake

குறித்த பதவி வெற்றிடமானமை தொடர்பில் அஜித் மான்னப்பெருமவின் பெயர் குறிப்பிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி நேற்றையதினம் (08) வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஜித் மான்னப்பெரும எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்தார்-SJB MP Ajith Mannapperuma Sworn in As MP In Place of Ranjan Ramanayake

அதற்கமைய, கம்பஹா தேர்தல் மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்டு, அடுத்தபடியாக விருப்பு வாக்குகளை கொண்டுள்ள அஜித் குமார மான்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Fri, 04/09/2021 - 10:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை