நாட்டுக்கு வைரஸ் பரவுவதை தவிர்க்க பூரண நடவடிக்கை

விமான சேவைகள் நிறுவன தலைவர் சந்திரசிறி

விமானப் பயணிகளின் மூலம் கொரோனா வைரஸ் நாட்டுக்குள் நுழைவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

விமானப் பயணிகள் ஒன்றிணைவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. சகல விமானப் பயணிகளும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும். அத்தியாவசிய விமானப் பணியாளர்களை மாத்திரம் இன்று தொடக்கம் சேவைக்கு அழைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sat, 04/24/2021 - 08:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை