5,000 ரூபாவை பெறாதவர்களுக்கு வழங்குவதற்கு விசேட திட்டம்

சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவான 5000 ரூபாவை பெற தகுதியிருந்தும் இதுவரை அதனைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு முறைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் தினங்களில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.  ஐயாயிரம் ரூபா சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவு 25 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், வயோதிபர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் உள்ள குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் நூறு வயதை கடந்தவர்களுக்கான கொடுப்பனவு பெறும் குடும்பங்கள், கோரிக்கை விண்ணப்பம் முன்வைத்து தகுதிபெற்ற குடும்பங்கள் என்பன தெரிவு செய்யப்பட்டன.மேற்படி பிரிவுகளின் கீழுள்ள கோரிக்கை முன்வைத்து உதவிபெற தகுதியான குடும்பங்களும் இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.

 

 

Tue, 04/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை