எவ்வித தடையுமின்றி 5000 ரூபா வழங்கப்படும் நேற்று ஆரம்பம்; இன்றும் தொடரும்

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற

எவர் எத்தகைய விமர்சனங்களை முன்னெடுத்தாலும் அரசாங்கம் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகளை நேற்று ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்தார். தமிழ் சிங்கள  புதுவருடத்தை யொட்டி சமுர்த்திஉதவி பெறுவோர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்றும் இன்றும் அதற்கான நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேற்படி கொடுப்பனவு தொடர்பில் எந்த தரப்பினரும் எந்த சிக்கல்களையும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்றும் குறித்த பிரதேசத்தில் வங்கி கிளைகளின் மூலம் மேற்படி 5000 ரூபாவை பெற்றுக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார். சமுர்தி அதிகாரிகளுக்கிடையில் சில பிரச்சினைகள் இருந்தபோதும் அவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்ட அவர் மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கொடுப்பனவு ஒழுங்குகள் தொடர்பில் ராஜாங்க அமைச்சர் ஜனக்க வரும்போது தெரிவிக்கையில் அரசாங்கம் பெருந்தொகை நிதியை ஒதுக்கி இக்காலங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கி வருகின்றது சூழ்நிலையிலும் அரசாங்கம் மேற்படி கொடுப்பனவை தொடர்ந்து வழங்கியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை மக்களுக்காக முன்னெடுத்த போதும் சில தரப்பினர் அரசாங்கத்திற்கு சேறு பூசும் வகையில் விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர் எந்தவித விமர்சனங்களை முன்வைத்தாலும் மக்களுக்கான அனைத்தையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 04/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை