கொவிட்-19: பிரேசிலில் ஒரே மாதத்திற்குள் 66,570 பேர் பலி

பிரேசிலில் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றினால் 66,570 பேர் உயிரிழந்திருப்பதோடு அது முந்தைய மாதத்தை விடவும் இரட்டிப்பு எண்ணிக்கையாக உள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. நோய்ப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் நாட்டின் சுகாதாரத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

நோய்த் தொற்றை கையாள்வது தொடர்பில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் இந்த வாரத்தில் முக்கிய புள்ளிகள் பலரும் பதவி விலகினர்.

எனினும் உள்ளூர் ஆளுநர்கள் மற்றும் மேயர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்கு அவர் கடந்த புதனன்று எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

“வைரஸ், வேலை இன்மை என்ற இரண்டு எதிரிகள் எமக்கு உள்ளன. அது தான் யதார்த்தம். வீட்டில் இருந்துகொண்டு எம்மால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது” என்று தெரிவித்தார்.

கடந்த புதனன்று மேலும் 3,800 புதிய உயிரிழப்புகள் மற்றும் 90,000க்கும் அதிகமான தொற்றுச் சம்பவங்களும் பதிவாகின. பிரேசிலின் தினசரி கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையானது இந்த வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழக்கும் கால் பங்கை தொட்டுள்ளது.

Fri, 04/02/2021 - 07:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை