பாராளுமன்ற அதிகாரம் சவாலுக்கு உட்படுகிறது

அரச நிதி நிர்வாகம் தொடர்பில் கண்காணிப்பதற்கு பாராளுமன்றத்திற்குள்ள அதிகாரம் சில சந்தர்ப்பங்களில் சவாலுக்கு உட்படுத்தப்படுவதாக கோப் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஒன்பதாவது அமர்வின் முதலாவது அறிக்கை நேற்று கோப் குழுத் தலைவரால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்போதே பேராசிரியர் சரித்த ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டார். லக்விஜய மின் உற்பத்தி நிலைய கணக்கறிக்கை தொடர்பில் அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார், சட்டபூர்வமான நிதியளிப்பை மீறி சில அரச நிறுவனங்கள் செயல்படும் விதம் தொடர்பில் தெரிவுக்குழுவில் மதிப்பீடு செய்யப்பட்டது. அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சில அரச நிறுவனங்கள் கணக்காய்வாளரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படாமையினால் சிக்கலான நிலைமை தோன்றியுள்ளது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் பாரபட்சமின்றி நடைபெறுகிறது என்றார்.(ஸ)

Thu, 03/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை