தேசிய அடையாள அட்டை தகவல்களை தொழில்நுட்ப மயமாக்கும் வேலைத்திட்டம்

தொழிநுட்ப ரீதியிலான இலங்கை என்ற வேலைத்திட்டத்திற்கமைய ஆட்பதிவு திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டை தகவல்களை தொழிநுட்பமயப்படுத்துவதற்கான (ஒன்லைன்) விஷேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சேவை பெறுனர்களின் விருப்பத்தின் பேரில், தேசிய அடையாள அட்டை தகவல்களை ஒன்லைன் மயப்படுத்த இவ் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை வங்கி, நேஷன் ட்ரஸ்ட் வங்கி, கொமர்ஷல் வங்கி, டயலொக் நிறுவனம், சம்பத் வங்கி, ஸ்டேட் பேங் ஒஃப் இந்தியா, எச்.எஜ்.பி.சி. உள்ளிட்டவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஓய்வூதியத் திணைக்களம், ஹட்டன் நெஷனல் வங்கி உள்ளிட்டவற்றுடனும் ஒப்பந்தம் கையெழுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நபர்களின் அடையாளத்தை பிழையின்றி மிக சரியாக உறுதிப்படுத்திக் கொள்வதோடு, துரித சேவையையும் வழங்கக் கூடியதாக இருக்கும்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 03/06/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை