மனிதவுரிமைகள் விவகாரத்தை அரசியல் மயப்படுத்த வேண்டும்

பாராளுமன்றில் சாணக்கியன் MP கோரிக்ைக

மனிதவுரிமைகள் விவகாரத்தை அரசியல் மயப்படுத்த வேண்டும். மனிதவுரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நாடாக இலங்கையை மாற்ற வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் தொடர்பான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையை இலங்கைக்கு எதிரான ஓர் அமைப்பாக காட்ட முற்படுகின்றனர். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்பதுதான் இதன் கருப்பொருள். மனிதவுரிமைகள் என்பது சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைவருக்கும் உரித்தான விடயம். இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷதான் மனிதவுரிமைகள் பேரவையை எமக்கு அடையாம் காட்டிக்கொடுத்திருந்தார். 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்களுக்கு அப்பால் ரத்துபஸ்வல சம்பவம், வெலிகடை சம்பவம், மஹர சிலைச்சாலை சம்பவம் மற்றும் அண்மையில் பேசுபொருளாக இருந்த சடலங்களை நல்லடக்கம் செய்யும் விவகாரம் மனிதவுரிமைகள் விவகாரத்தில் பொது விடயமாகும்.

இலங்கையிலுள்ள இளைஞர்களிடம் பொதுவாக வினவினால் கனடாவுக்குச் செல்லவும், அவுஸ்ரேலியாவுக்குச் செல்லவும் அல்லது ஐரோப்பாவுக்குச் செல்ல விருப்பம் என்கின்றனர். அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு இலகுவாக வெளிநாடுகளில் தொழில்களை செய்ய முடியும். ஆனால், நாட்டின் சாதாரண இளைஞர்களுக்கு கனடா செல்ல விருப்பமுள்ளது. ஏன் அவ்வாறு விரும்புகின்றனர். அங்கு மனிதவுரிமைகள் உள்ளன. அந்த நாடுகள் மனிதவுரிமைகளுக்கு மதிப்பளிக்கின்றன. இலங்கையை கனடா போன்று அவுஸ்ரேலியா போன்றும் மாற்றியமைக்க வேண்டும்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 03/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை