பீதுருதாலகால வனத்தை பாதுகாக்க விசேட திட்டம்

நுவரெலியா பீதுருதாலகால பாதுகாப்பு  வனத்தைபாதுகாக்கும் வகையில் தீ பரவலை  கட்டுப்படுத்தும் இடைவெளி (Fire cabe)   வேலைத்திட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது .

மாவட்ட அலுவலகம், மரக்கூட்டுத்தாபனம் மற்றும் வனப்பாதுகாப்பு காரியாலயம் , இராணுவம், விசோட அதிரடிப்படையினர் மற்றும் சகல அரச காரியாலய அதிகாரிகள்,உத்தியோகஸ்தர்கள்  இணைந்து இத்திட்டத்திட்டத்தை நேற்று 16/03/2021காலை   முன்னெடுத்தனர்.நீர்வளம் மற்றும் அரியவகை மரங்களை கொண்ட குறித்த  வனப்பகுதி இனந்தெரியாதோரால் சுமார் 20தடவைகளுக்கு மேல் தீ வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் பீதுருதாலகால வனப்பிரதேசம்   அழிவுற்று வருகிறது.

இதனைத்தடுத்து பாதுகாக்கும் வகையிலேயே  தீயை கட்டுப்படுத்தும் இடைவெளியை ஏற்படுத்தும்  திட்டத்தை முன்னெடுத்ததாக  அனர்த்த முகாமைத்துவ உதவி அத்தியட்சகர் ரஞ்சித் அலககோன் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Wed, 03/17/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை