இத்தாலியில் மீண்டும் பொது முடக்கநிலை

ஈஸ்டர் பண்டிகையின்போது கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் பின்பற்றப்படும் என  இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இத்தாலியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

நாட்டின் லோம்பார்டி, லோசியோ உள்ளிட்ட 7 நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிக பாதிப்புகளை பதிவு செய்துள்ளன.

இந்நிலையில் இத்தாலியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதிவரை, அத்தியாவசியமில்லாத கடைகள் நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும். வேலை, சுகாதாரம் அல்லது அவசரக் காரணங்களுக்கு மட்டும் மக்கள் அந்த நாட்களில் வெளியே செல்லமுடியும்.

தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த வாரம் கொரோனா பரவல் 10 வீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எளிதில் பரவக்கூடிய புதிய வகை வைரஸ் தொற்று மாதிரிகள் பரவிவருவதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Mon, 03/15/2021 - 11:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை