சுகாதார சேவை யாப்பு திருத்தம்; முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்க முஸ்தீபு

- மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

சுகாதாரத்துறை யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

அது தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதாவது,  

சுகாதார அமைச்சானது சுகாதார சேவைகள் யாப்பை திருத்தத்திற்கு உட்படுத்தி உள்ள நிலையில் அது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீளப் பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  

சுகாதார அமைச்சு அனைத்து சுகாதார சேவைகள் யாப்பை எந்த மருத்துவத்துறை சார்ந்த முக்கியஸ்தர்களின் இணக்கப்பாடும் இன்றி திருத்தியுள்ளது அந்த திருத்தங்கள் காரணமாக பல்வேறு சிக்கல்களை சுகாதாரத்துறை எதிர்கொள்ள நேரும்.

அதனைக் கருத்திற்கொண்டே மேற்படி யாப்பை திருத்தத்திற்கு உட்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சை கேட்டுக்கொள்கின்றது.   மேற்படி விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 18ஆம் திகதி அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் மத்திய குழு கூடி முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த போவதாகவும் சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.(ஸ)  

லோரன்ஸ் செல்வநாயகம்  

Mon, 03/15/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை