மருத்துவமனை மீது சிரிய அரச படையின் தாக்குதலில் பலர் பலி

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு வடமேற்கு சிரியாவில் மருத்துவமனை ஒன்றின் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பொதுமக்கள்கொல்லப்பட்டதாக சர்வதேச மீட்புக் குழு தெரிவித்துள்ளது.  

அதரிப் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஐந்து சுகாதார ஊழியர்கள் உட்பட 16பேர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனை மீண்டும் தனது பணியை ஆரம்பித்துள்ளது.  

'காயமுற்ற நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர்' என்று சர்வதேச மீட்புக் குழு தெரிவித்தது. தாக்குதலுக்கு இலக்கான மருத்துவமனை இந்தக் குழுவின் கூட்டாண்மை அமைப்பான சம்ஸ் நிறுவனத்தினாலேயே நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

வட மேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதிகளை உள்ளடக்கியதாக 2021மார்ச் மாதம் நடைமுறைக்கு வந்த ரஷ்யா மற்றும் துருக்கி இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கையை மீறுவதாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  

மருத்துவமனையின் நுழைவுப் பகுதி மீது சிரிய அரச படை பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு மற்றும் போர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

Tue, 03/23/2021 - 07:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை