மீண்டும் எபோலா தொற்று:கினியாவில் நால்வர் பலி

கினியா நாட்டில் எபோலோ தொற்று ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு பிராந்தியமான நிசரகோரிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதில் கடந்த ஜனவரி பிற்பகுதியில் சுகவீனம் உற்ற ஒரு தாதி பெப்ரவரியில் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் சகோபா கெய்டா தெரிவித்துள்ளார்.

“அந்த நல்லடக்க நிகழ்வில் பங்கேற்ற எட்டுப் பேரிடம் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு ஆகிய நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இவர்களில் மூவர் உயிரிழந்திருப்பதோடு ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2013–2016 பெருந்தொற்றுக்குப் பின்னர் பதிவாகி இருக்கும் இந்த உயிரிழப்புகள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி இருப்பதாக சுகாதார அமைச்சர் ரெமி லமாஹ் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் கினியாவில் ஆரம்பித்த எபோலா தொற்றினால் பிராந்தியத்தில் 11,300 பேர் உயிரிழந்தனர்.

Mon, 02/15/2021 - 16:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை