லொக்குபண்டாரவின் உடல் சுகாதார வழிமுறைபடி தகனம்

- ஜனாதிபதி, பிரதமர் அனுதாபம்

முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், ஆளுநருமான வி.ஜ.மு.லொகுபண்டார வின் இறுதிக் கிரியை நேற்று கொடிகாவத்தை பொதுமயானத்தில் இடம்பெற்றது.

கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

அவரின் உடல் நேற்று சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தகனம் செய்யப்பட்டது.

அவரின் திடீர் மறைவு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அனுதாபச் செய்தியில்,

வி.ஜ.மு.லொகுபண்டார அவர்கள் ஒரு அரசியல்வாதியாக தனது தாய்நாட்டின் அபிலாஷைகளை நிறைவேற்ற விலைமதிப்பற்ற சேவையாற்றியவராவார்.

பொது சேவையை மிகவும் உன்னதமாகக் கருதிய அவர், இந்நாட்டின் பல அரசியல் யுகங்களின் அழியாத நினைவாக திகழ்வார். நாட்டையும் தேசத்தையும் உன்னதமாக மதிப்பளித்து செயற்பட்ட வி.ஜ.மு.லொகுபண்டாரவின் அரசியல் நோக்குநிலையும் அதேபோன்று உன்னதமானதாகும். ஒரு அரசியல்வாதியாக மாத்திரமன்றி, ஒரு நெருங்கிய நண்பராகவும் அவர் என்னுடன் பழகிய விதம் இன்றும் எனது நினைவில் நிலைத்திருக்கிறது. வி.ஜ.மு. எனும் பெயரில் இலங்கை சமுதாயத்தில் சபாநாயகராகவும், மக்கள் சார்பு அரசியல்வாதியாகவும் மற்றும் ஒரு இலக்கியவாதியாகவும் அவர் விட்டுச் சென்ற தடங்கள் இது ஒருபோதும் இந்நாட்டு மக்களின் இதயங்களிலிருந்து மங்காது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tue, 02/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை