சீனா தொடர்பில் அமெரிக்கா ஐ.ஒ. இடையே ஒத்துழைப்பு

சீனா தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் வலுவான ஒத்துழைப்புடன் செயற்பட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டொனி பிளின்கன் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி ஜோசெப் பொரல் இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

“அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவை மேம்படுத்தல், உயிர்ப்பித்தல் மற்றும் எதிர்பார்ப்பு அளவை அதிகரிப்பது தொடர்பில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டொனி பிளின்கன் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி ஜோசெப் பொரல் இடையே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது” என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கொவிட்–19, காலநிலை மாற்றம், அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் தரவு ஊடாடல்கள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உட்பட சவால்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இதன்போது வலியுறுத்தியதாக அதில் மேலும் கூறப்பட்டது.

Wed, 02/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை