ஆஸியில் முடக்கத்திற்கு இடையே கடும் காட்டுத்தீ

மேற்கு அவுஸ்திரேலிய நகரான பேர்த்தில் காட்டுத் தீ காரணமாக கொரோனா தொற்று முடக்கநிலையில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காற்றுக் காரணமான தீ வேகமாக பரவி வரும் நிலையில் குறைந்தது 30 வீடுகள் அழிந்திருப்பதாக நம்பப்படுகிறது. முடக்கநிலை இருந்தபோதும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிச் செல்லும்படி மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட இந்தத் தீ இரட்டிப்பாக பரவி, பண்ணைகள் மற்றும் காட்டுப்பகுதிகள் என 7,366 ஹெக்டர் நிலம் சேதமடைந்திருப்பதாக மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் தீ மற்றும் அவசர சேவைத் திணைக்கள பிரதி ஆணையாளர் கிரேய்க் வோட்டர்ஸ் தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணுகின்ற நிலையில் சுமார் 250 தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். எனினும் உஷ்னம் மற்றும் கடும் காற்று அவர்களின் பணிகளில் சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதாக வோட்டர்ஸ் குறிப்பிட்டார்.

பேர்த் நகரில் கொரோனா தொற்று சம்பவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த நகர் முழுவதும் ஐந்து நாட்களுக்கு முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 02/03/2021 - 07:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை