நுண்நிதி மோசடியில் சிக்கியுள்ள மக்களை பாதுகாக்க புதிய திட்டம்

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ

நுண்நிதி மோசடிகளிலிருந்து அப்பாவி மக்களை விடுவிப்பதற்காக மக்கள் மைய அமைப்புக்களை கிராமங்களில் பலப்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

மக்களை மையமாகக் கொண்ட அமைப்புக்களை வலுவூட்டும் தேசிய வேலைத்திட்டம் அநுராதபுரம் மாவட்டத்தில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் சமுர்த்தி திட்டத்திற்குள் ஒரு பலமான பொறிமுறை உருவாக்கப்படும். கிராமத்தை முன்னேற்றுவதற்கு அந்தக் கிராம மக்கள் சமுர்த்தி அதிகாரிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

சமூக மைய சங்கத்தில் பங்கேற்காத குழுக்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு பங்கேற்காதவர்கள் சமுர்த்தி தேவையற்றவர்கள் எனக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக மக்கள் மைய அமைப்புகளுக்கு 3 இலட்சம் ரூபா வழங்கப்படும். சமுர்த்தி திட்டத்தின் ஊடாக உயர்ந்தபட்ச தொகையாக 10 ஆயிரம் ரூபா வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும்.

சரியான முறையில் 3 இலட்சம் ரூபா தொகையை நிர்வகிக்க முடிந்தால் அதனையும் விட கூடுதலான தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ ேமலும் குறிப்பிட்டார்.

Tue, 02/23/2021 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை