சீனாவின் கடல்துறை சட்டத்தால் பதற்றம்

சீனாவின் புதிய கடல்துறைச் சட்டம் குறித்து ஜப்பானும், பிரிட்டனும் அக்கறை தெரிவித்துள்ளன. அந்தச் சட்டம் இருநாட்களுக்கு முன் நடப்புக்கு வந்தது.

அதன் கீழ், வெளிநாட்டுக் கப்பல்களைத் தடுத்து நிறுத்த, கடலோரக் காவல் படையினர் ஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடலாம்.

கடல் பயணம் மேற்கொள்வதற்கான சுதந்திரம்,தென் சீனக் கடலுக்கு மேலுள்ள பகுதிகளில் பறப்பதற்கான சுதந்திரம் ஆகியவற்றுக்கு அது தடையாக இருப்பதாக ஜப்பானும், பிரிட்டனும் கூறின.

இரு நாடுகளும் அது குறித்த கூட்டறிக்கையை வெளியிட்டன.

பதற்றத்தை அதிகரிக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் என்று அனைத்துத் தரப்பிடமும் அவை கேட்டுக்கொண்டன.

கிழக்குச் சீனக் கடல்பகுதியில் ஜப்பான், சீனா இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடும் தீவுகள் உள்ளன. அந்த வட்டாரத்தில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் அதிகமாகக் கவலை அடைந்துள்ளது.

பிராந்தியத்தின் கடல் பகுதிகளை உரிமை கொண்டாடும் சீனாவின் நடவடிக்கைகளில் அந்நாட்டு கடலோரக் காவல்படை கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 02/05/2021 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை