காதலர் தின குறுஞ்செய்திகள் பரிமாறல்

இன்றும் நாளையும் பொலிஸ்  CID பிரிவு உஷார் நிலையில்

 

காதலர் தினத்தையொட்டி கையடக்க தொலைபேசிகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் இளைஞர், யுவதிகளை ஏமாற்றி பணம் அபகரிக்கும் செயற்பாடுகள் இடம்பெறலாம். அது தொடர்பில்  எச்சரிக்கையாக செயற்படுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஏமாற்றுக் குழுக்கள் அது தொடர்பில் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறு இன்று 13 நாளை 14ஆம் திகதிகளில் தமக்கு கிடைக்கும் குறுந்தகவல்கள் தொடர்பில் இளைஞர், யுவதிகள் எச்சரிக்கையாக செயற்படுமாறும் ஏமாந்து விட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; நாளைய தினம் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் அதற்காக கையடக்கத் தொலைபேசி அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் காதலர் அல்லது காதலி பரிசுப்பொருட்கள் அனுப்பியுள்ளதாக கூறி அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அந்த வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடுமாறும் கோரப்படலாம்.

அவ்வாறான குறுந்தகவல்கள் கிடைத்தால் அது தொடர்பில் பல தடவைகள் ஆராய்ந்து செயற்படுமாறும் ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களை ஏமாற்றுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதுபோன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் செயற்படும் ஏமாற்றுக்காரர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 02/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை