திருகோணமலை வைத்தியசாலை சிற்றூழியர்கள் வேலைநிறுத்தம்
திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பத்து கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் நேற்றுமுன்தினம் (17) காலை 9 மணி தொடக்கம்10.30 மணி வரை இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.
ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வாரத்தில் மேலதிக 8 மணி நேரத்திற்கு சம்பளத்தில் 180 நாட்களை நிறைவு செய்த சகல சுகாதார சிற்றூழியர்கள் சமயாசமய ஊழியர்கள் உடனடியாக நிரந்தரமாக்கிக் கொள்ளல்.
சீருடை கொடுப்பனவை பதினையாயிரம் ரூபாவாக மற்றும் சக ஊழியர்களுக்கும் விசேட அனர்த்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளல்,
மேலதிக நேர வேலையை பெற்றுக் கொள்ளல், சிற்றூழியர்கள் குறையை நிவர்த்தி செய்தல், முகாமைத்துவ சேவை பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் நியமன பெற்றுக் கொள்ளலும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களின் ஓய்வூதிய உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பல வருடங்களாக போராடி வருவதாகவும் முந்தைய அரசாங்கம் தற்போதைய அரசாங்கமும் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினாலும் இது வரை ஒரு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனவும் மிக விரைவில் எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் மிக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ரொட்டவெவ குறூப் நிருபர்
from tkn
Post a Comment