ஆய்வுக்கலன் செவ்வாயில் இறங்கும் படம் வெளியீடு

தாங்கள் அனுப்பிய ‘பொ்சிவரன்ஸ்’ ஆய்வுக்கலன் செவ்வாய் கிரத்தில் தரையிறங்கும் துல்லியமான படத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அந்தப் படத்தில், நாசா விண்கலத்திலிருந்து செவ்வாய் கிரக மேற்பரப்பில் பொ்சிவரன்ஸ் பத்திரமாகக் கட்டி இறக்கப்படும் காட்சி தெளிவாக இடம் பெற்றுள்ளது.

ஆய்வுக்கலன் தரையிறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அந்தப் படத்தை நாசா வெளியிட்டது.

பொ்சிவரன்ஸைத் தரையிறக்கிய நாசா விண்கலத்தில், 25 கெமராக்களும் 2 ஒலிவாங்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

எனவே, இதுவரை இல்லாத அளவுக்கு ஆய்வுக்கலன் தரையிறங்கிய காட்சி மிகத் துல்லியமான ஒளி ஒலி காட்சிகளுடன் பதிவாகியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

செவ்வாயின் ஜெசெரோ என்ற பள்ளத்தாக்கில் தரையிறக்கப்பட்ட ஆய்வுக் கலன் அந்தக் கிரகத்தில் கடந்தகாலத்தில் உயிரினங்கள் இருந்ததற்கான அடையாளங்களை தேடி ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

Mon, 02/22/2021 - 07:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை