அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தவர்களுக்கு தொற்றில்லை

மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்தில், அண்மையில் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கோ மற்றும் அப்பெண்ணின் குடும்ப உறவினர்களுக்கோ கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார். மரணித்த பெண்ணின் குடும்ப உறவினர்களுக்கு மேற்கொண்ட பீ.சீ.ஆர். பரிசோதனையின் பின்னரே, இத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.  

இப்பகுதியில் மரணித்த பெண்ணொருவரின் ஜனாஸாவை,கிராம சேவகரின் அனுமதியைப் பெறுவதற்கு முன்னர் அடக்கம் செய்தமை தொடர்பில், எழும்பிய சந்தேகத்தை அடுத்தே, குறித்த பெண்ணின் குடும்பஸ்தவர்கள் பி,சீ,ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.  இவர்கள், எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என் ஊர்ஜிதம் செய்யப்பட்டதை அடுத்தே நிலைமைகள் சுமுகமடைந்தன.

மினுவாங்கொடைப் பொலிஸாரின் உத்தரவுக்கு இணங்க, பொதுச் சுகாதார அதிகாரிகளே இப்பரிசோதனையை மேற்கொண்டனர். எனவே,"மரணித்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், அப்பெண்ணை அடக்கம் செய்ததில் தவறில்லை" எனவும் பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பெண் நீண்டகாலமாக சுகயீனமாக இருந்ததாலே, மரணித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

குடும்பத்தாரிடம் பெறப்பட்ட பீசீஆர் அறிக்கைகள் மினுவாங்கொடை பொலிஸ் நிலையம்,  பிரசே சுகாதார காரியாலயம் என்பவற்றுக்கும் கையளிக்கப்பட்டது.

மினுவாங்கொடை நிருபர்  

Thu, 01/21/2021 - 13:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை