தடுப்பூசிகளுக்காகக் காத்திருக்கும் பிரேசில்

இந்தியாவிலிருந்து 2 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளுக்குக் காத்திருப்பதாக பிரேசில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழகம் AstraZeneca- நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசியைத் தயாரிக்கிறது.

அந்தத் தடுப்பூசி இன்று பிரேசிலைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரமே கிடைக்கவேண்டிய தடுப்பூசிகள் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் தாமதமானதாக பிரேசில் பிரதமர் ஜயிர் போல்சொனாரோ கூறினார்.

இந்தியாவிலிருந்து பெறப்படும் தடுப்பூசிகள் பிரேசிலில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த மிக முக்கியம் என்று கருதப்படுகிறது. உலக அளவில் கொவிட்-19 நோய்த்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று.

அங்கு சுமார் 214,000 பேர் கிருமித்தொற்றால் இறந்தனர்.

Sat, 01/23/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை