அமெரிக்காவில் மீண்டும் பயணத் தடை அமுல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பயணத் தடைகளை மீண்டும் செயல்படுத்தவிருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி கூறியுள்ளார்.

பிரிட்டன், பிரேசில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், ஆகியவற்றுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டவர்களுக்குத் தடை விதிக்கப்படும். அண்மையில் தென்னாபிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டவர்களுக்கும் அது பொருந்தும்.

தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதுவகைக் கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அமெரிக்கக் குடிமக்கள் அல்லாதோருக்குப் பயணத்தடைகள் பொருந்தும்.

இதற்கு முன்னர் ஐரோப்பா, பிரேசில் ஆகியவற்றிலிருந்து வரும் பயணிகள் மீதான தடை நீக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

அது இன்று செவ்வாய்க்கிழமை நடப்புக்கு வரவுள்ளது.

இந்நிலையில் பைடனின் நிர்வாகம், பயணத் தடையை மீண்டும் நடப்புக்குக் கொண்டுவந்துள்ளது. அது வெளிநாட்டிலிருந்து வருவோருக்கான தனிமைப்படுத்தும் நடைமுறையையும் செயல்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 25 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Tue, 01/26/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை