கிர்கிஸ்தான் தேர்தலில் சாதிர் ஜபரோவ் வெற்றி

கிர்கிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் முன்னணி வேட்பாளரான சாதிர் ஜபரோவ் அமோக வெற்றியீட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜபரோவ் 80 வீத வாக்குகளை வென்றிருப்பதாக ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன.

எதிர்த்தரப்பு அரசியல்வாதி ஒருவரை பணயக்கைதியாக பிடித்த குற்றச்சாட்டில் சிறை அனுபவித்திருந்த அவர், அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கான புதிய அதிகாரங்களையும் பெறவுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் தொடக்க கிர்கிஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த தேர்தல் முடிவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் அப்போதைய ஜனாதிபதி சூரன்பே ஜீபெகோவ் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

Tue, 01/12/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை