சிம்பாப்வே அமைச்சர் கொரோனாவுக்கு பலி

கொரோனா வைரஸ் தொற்றால் நோயுற்ற சிம்பாப்வே வெளியுறவு அமைச்சர் சிபுசிசோ மோயோ காலமானார்.  

முன்னாள் இராணுவ ஜெனரலான சிபுசிசோ, 2017இல் நீண்டகால ஜனாதிபதி ரொபர்ட் முகாபே பதவி கவிழ்க்கப்பட்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது பற்றிய அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்றார்.  

சிம்பாப்வேயில் விடுமுறைக் காலத்திற்குப் பின்னர் கொரோனா தொற்று பரவல் வேகமடைந்துள்ளது. அங்கு 28,675நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 825பேர் உயிரிழந்துள்ளனர்.  

இதில் பாதிக்கும் அதிகமான சம்பவங்கள் புத்தாண்டு விடுமுறைக்கு பின்னரே பதிவாகியுள்ளன.  

இதில் சிம்பாப்வே அரசில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் இரண்டாவது சிரேஷ் உறுப்பினராக சிபசிசோ உள்ளார். கடந்த ஜூலையில் ஓய்வுபெற்ற ஜெனரலும் விவசாயத்துறை அமைச்சருமான பெரன்ஸ் சிரி இந்த நோயினால் உயிரிழந்தார்.  

ஆபிரிக்க கண்டத்தில் கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் தென்னாபிரிக்காவில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 38,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.    

Fri, 01/22/2021 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை