20 நாள் சிசுவின் உடல் எரிப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு

- தொடர்ந்து பைஸர் ஆஜர் 

பிறந்து 20நாட்களேயான சிசுவின் உடலை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கெதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

முன்னாள் அமைச்சர், சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தானாக முன்வந்து மனுத்தாக்கல் செய்து, தானே நீதிமன்றத்தில்  ஆஜராகவுள்ளார்.  

இந்த வழக்கு, (22) வெள்ளிக்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தலைமையிலான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் அடங்கிய குழுவினர், இந்த வழக்கில் ஆஜராகவுள்ளனர்.

பிறந்து 20 நாள் சிசுவின் உடல் தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் பல பாகங்களிலும் மற்றும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, லண்டன், ஜேர்மன், இந்தியா போன்ற நாடுகளிலும் கண்டனப் பேரணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 01/22/2021 - 08:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை