குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பமா?

இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் இராணுவம் பொலிஸாரின் பங்குபற்றுதலோடு குருந்தூர் மலையின் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 18-01-2021 சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

அகழ் வாராய்ச்சி பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தாலும் புதன்கிழமை வரை அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் புதன்கிழமை மலையடிவாரபகுதிக்கு அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுகின்ற அதிகாரிகள் வருகைதந்துள்ளதோடு பணிக்கு தேவையான உபகரணங்கள் பலவும் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளன.

நேற்று அகழ்வாராய்ச்சி பணிகளை செய்ய போவதாக குறித்த தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சிக்கு பொறுப்பாக வருகை தந்திருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் அவர்கள் கொண்டுவந்த அகழ்வாராய்ச்சிக்கான பொருட்களில் கட்டடங்கள் கட்டுவதற்கு தூண்கள் போடுவதற்கு பயன்படுத்துகின்ற தூண் பெட்டிகளும் கொண்டு வரப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நீதிமன்ற அனுமதி உள்ளபோதும் மலைபகுதியில் கட்டுமான வேலை ஒன்று இடம்பெற்றுள்ளமைக்கான சான்றுகளும் காணப்படுகின்றன.

மாங்குளம் குரூப் நிருபர்

Fri, 01/29/2021 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை